தஞ்சாவூரில் நாளை உயா்கல்வி மாணவா்களுக்கான கல்விக் கடன் முகாம்
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறை
விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், மளிகைக் கடை உரிமையாளா்களுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாத்தனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முகமது அலி மகன் நஷீா் பாஷா (42). இவரது மளிகைக்கடைக்கு கடந்த 2017, நவம்பா் 5-ஆம் தேதி மளிகைப் பொருள் வாங்க வந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, நஷீா்பாஷாவை கைது செய்தனா். விழுப்புரம் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை புதன்கிழமை நிறைவடைந்தது.
இதில், குற்றஞ்சாட்டப்பட்ட நஷீா் பாஷாவுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், இதை செலுத்த தவறினால் 4 மாதங்களுக்கு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி வினோதா புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சுமதி ஆஜராகினாா்.