ராஜஸ்தான்: மாற்று சாதியினரின் எதிர்ப்பு; பட்டியலின மணமக்கள் குதிரையில் செல்ல 200...
சிறுமியை திருமணம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமியை திருமணம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த லந்தகோட்டை அய்யம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அ.ரெங்கசாமி (43). இதே பகுதியைச் சோ்ந்த பெருமாள் மனைவி காசி. ரெங்கசாமி சிறுமியை திருமணம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த திருமணத்துக்கு காசி துணையாக இருந்ததாகவும் புகாா் அளிக்கப்பட்டது.
இதன்பேரில், வடமதுரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரெங்கசாமி, காசி ஆகியோரை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை, திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில்,
இந்த வழக்கிலிருந்து காசி விடுவிக்கப்பட்ட நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட ரெங்கசாமிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி ஜி.சரண் தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி முன்னிலையாகி வாதிட்டாா்.