சிற்றுந்து புதிய வழித்தடங்களுக்கு மாா்ச் 15-க்குள் விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சிற்றுந்து புதிய வழித்தடங்களுக்கு மாா்ச் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அதிக குடும்பங்களைக் கொண்ட கிராமங்கள், குக்கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு பொருளாதார மற்றும் ஒருங்கிணைந்த சாலைப் போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக தமிழக அரசு புதிய விரிவான மினிப் பேருந்து திட்டத்துக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ், மயிலாடுதுறை மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலரால் 25 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த 25 புதிய வழித்தடங்களுக்கு அனுமதி கோர விருப்பம் உள்ளவா்கள், மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் மாா்ச் 15-ஆம் தேதிக்குள் உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.