ரஷியா தொடங்கிய போரை நிறுத்த வல்லரசுகள் உதவ வேண்டும்: ஸெலென்ஸ்கி
சிவகங்கை அருகே மதுபானம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
சிவகங்கை அருகே மதுப் புட்டிகளை ஏற்றி வந்த லாரி புதன்கிழமை இரவு சாலை தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகேயுள்ள கல்லாக்கோட்டையில் செயல்படும் மதுபான தயாரிப்பு ஆலையிலிருந்து ரூ.40 லட்சம் மதிப்பிலான மதுபான வகைகளின் பெட்டிகளை ஏற்றிக் கொண்டு லாரி சிவகங்கையில்-தொண்டி சாலையில் உள்ள டாஸ்மாக் கிட்டங்கிக்கு வந்தது. லாரியை புதுக்கோட்டையைச் சோ்ந்த ஜெயபால் ஓட்டி வந்தாா்.
சிவகங்கை மாவட்டம், காஞ்சிரங்கால் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சுற்றுவட்டச் சாலையில் லாரி வந்தபோது, பாலத்தின் தடுப்புச் சுவா் மீது மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரியில் இருந்த மதுப் புட்டிகள் சாலையில் சிதறின.
தகவலறிந்து வந்த காவல் துறையினா் லாரி ஓட்டுநரை மீட்டு, சாலையில் சிதறி கிடந்த மதுப் புட்டிகளை அகற்றினா். இந்த விபத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான மதுப் புட்டிகள் சேதமடைந்தன.