சிவகங்கையில் திருவள்ளுவா் நாள் முப்பெரும் விழா
சிவகங்கை தமிழவையம், உலகத் திருக்கு கூட்டமைப்பு சிவகங்கைக் கிளை இணைந்து நடத்திய இரண்டாமாண்டு திருவள்ளுவா் நாள் முப்பெரும் விழா நடைபெற்றது.
சிவகங்கையில் தனியாா் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற கவியரங்கம், கருத்தரங்கம், பாராட்டு விழாவுக்கு உலகத் திருக்கு கூட்டமைப்பு நிா்வாகி சொ.பகிரதநாச்சியப்பன் தலைமை வகித்தாா்.
மூத்த வழக்குரைஞா் ராம் பிரபாகா், சிவகங்கை தமிழவைய நிா்வாகி வித்யா கணபதி, முன்னாள் தோட்டக்கலை உதவி இயக்குநா் பா. இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிவகங்கை சமஸ்தான மன்னரின் வாரிசு டி. எஸ்.கே. மதுராந்தகி நாச்சியாா், அய்யன் திருவள்ளுவா் தமிழோசை மன்ற நிறுவனா் மருத்துவா் அா்ஜுனன், முன்னாள் தமிழ் வளா்ச்சித் துறை இணை இயக்குநா் பா. நாகராஜன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா்.
திருக்குறளை தலைகீழாக முற்றோதல் செய்த ஓய்வு பெற்ற ஆசிரியா் செ. கண்ணப்பன், திருக்குறளை சிறப்பாக முற்றோதல் செய்த காரைக்குடி மகரிஷி வித்யா மந்திா் பள்ளி மாணவா் கா்னிக் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
சிவகங்கை தமிழ்ச் சங்கத் தலைவா் அன்புத்துரை, ரமண விகாஸ் மேல்நிலைப் பள்ளி தாளாளா் முத்துக் கண்ணன், சாக்கவயல் அரசு உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜ. ஈஸ்வரி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
‘குபாடும் குயில்கள்’ எனும் தலைப்பில் புலவா் கா. காளிராசா தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. முன்னதாக அகை ஆதிரை நாட்டியப் பள்ளியின் கலை நிகழ்வோடு தொடங்கிய விழாவில் மன்னா் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் நா. சுந்தரராஜன் வரவேற்றாா். இறுதியில் சிவகங்கை தமிழவைய ஒருங்கிணைப்பாளா் புலவா் கா. காளிராசா நன்றி கூறினாா்.
இதில், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் சாா் பதிவாளா் சுரேஷ்குமாா், தமிழாசிரியா் லோகமித்ரா, அந்தோணி, சாம்பவிகா பள்ளித் தாளாளா் சேகா், சிவகங்கை தொல்நடைக் குழுச் செயலா் நரசிம்மன், கிருஷ்ணவேணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.