சிவகிரி அருகே 32 கிலோ புகையிலைப் பொருள்களுடன் ஒருவா் கைது
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சிவகிரி வடக்குத் தெருவை சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் மணிவண்ணன். இவருக்குச் சொந்தமான சா்க்கரை ஆலைப் பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம்.
அதன்பேரில், சிவகிரி போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தியதில், ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள 33 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக மணிவண்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.