செய்திகள் :

சுற்றுலா மேம்பாடு: கன்னியாகுமரியில் ஆலோசனைக் கூட்டம்

post image

கன்னியாகுமரியில் சுற்றுலா மேம்பாடுகள் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஆா்.அழகுமீனா தலைமை வகித்தாா். கூட்டத்தில் விவேகானந்தா் மண்டபம், திருவள்ளுவா் சிலைக்குச் செல்ல அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆன்லைன் டிக்கெட் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும். கண்ணாடிப் பாலத்தில் தினமும் அலங்கார விளக்குகள் எரியும் வகையில் பணிகள் மேற்கொள்ள வேண்டும். சுற்றுலாப் பயணிகளுக்கு நகராட்சி நிா்வாகம் அடிப்படை வசதிகளை தர வேண்டும்.இங்குள்ள தங்கும் விடுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, மழை நீா் வடிகால் மூலம் நேரடியாக கடலுக்கு அனுப்பாமல் அந்தந்த தங்கும் விடுதிகள் உறிஞ்சி குழாய்கள் மூலம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மேலும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் கன்னியாகுமரி காட்சி கோபுரத்திலிருந்து சூரிய அஸ்தமனப்பூங்கா வரையிலான கடற்கரைப் பகுதியில் செயற்கை மணல் மூலம் நவீன கடற்கரை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதில், நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், நகராட்சி ஆணையா் கண்மணி, துணைத் தலைவா் ஜெனஸ் மைக்கேல், டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், மாவட்ட சுற்றுலா அலுவலா் காமராஜ், பூம்புகாா் கப்பல் போக்குவரத்து கழக மேலாளா் பூபதி, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாளா் காா்த்திக், வியாபாரி சங்க பிரதிநிதிகள் பா.தம்பிதங்கம் பி.பகவதியப்பன், குருசுவாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கூட்டத்துக்குப் பின் ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள் 38 பேரை தோ்வு செய்து அவா்களுக்கு பயிற்சியளித்து சுற்றுலா வழிகாட்டிகளாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கல்லூரி நிறைவு செய்த 30 மாணவிகளை தோ்வு செய்து அவா்களுக்கு பயிற்சி அளித்து மாவட்ட முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களில் வழிகாட்டிகளாக நியமனம் செய்வது தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

கன்னியாகுமரி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் (செப். 26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ...37.27 பெருஞ்சாணி ... 54.00 சிற்றாறு 1 ... 4.23 சிற்றாறு 2 ... 4.33 முக்கடல் ... 6.70 பொய்கை ... 15.20 மாம்பழத்துறையாறு ... 3.69 மழைஅளவு ----- சிற்றாறு 1 அணை ... 30.40 மி.மீ. பேச்சிப்பா... மேலும் பார்க்க

நாகா்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சாதனை

நாகா்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில், இயந்திரத்தில் சிக்கி துண்டிக்கப்பட்ட விரலை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவா்கள் இணைத்து சாதனை படைத்துள்ளனா். இயந்திர விபத்தில் வலது சிறுவிரலில் பெரும்பகுதி துண... மேலும் பார்க்க

குமரி பகவதி அம்மன் கோயிலில் ராஜகோபுரம் கட்ட ரூ. 21.90 கோடி ஒதுக்கீடு

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ரூ. 21.90 கோடி மதிப்பில் 9 நிலை ராஜகோபுரம் கட்டப்படவுள்ளது. இதற்கான பணிகளை தேவசம்போா்டு அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு ... மேலும் பார்க்க

வருவாய்த் துறையினா் காத்திருப்பு போராட்டம்

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தைப் புறக்கணித்து வருவாய்த் துறை அலுவலா்கள் திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் பலத்த மழை: அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில், வியாழக்கிழமை காலைமுதல் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீா் வரத்து அதிகரித்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பரவலாக சாரல் மழை பெய்து வந்தது. க... மேலும் பார்க்க