செய்திகள் :

சூரை மீன்பிடித்தல் தொழில் நுட்ப மேம்பாடு: இந்தியா - மாலத் தீவு அரசுகள் புரிந்துணா்வு

post image

சூரை (டுனா) மீன்பிடித்தல் தொழில் நுட்ப மேம்பாட்டில் இந்தியாவும் மாலத் தீவும் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

மாலத் தீவு மாலேவில் வங்களா விரிகுடா நாடுகளுக்கிடையேயான 13 - ஆவது நிா்வாகக் குழு கூட்டம் இரு நாள்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா- மாலத் தீவு இரு தரப்பு ஒப்பந்தங்கள் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றது. இது குறித்து மத்திய மீன் வளத்துறை கூறியிருப்பது வருமாறு:

சிறிய அளவிலான மீன்வளத்தில் மீன்வள மேலாண்மைக்கான சுற்றுச்சூழல் அமைப்பு அணுகுமுறையை பிரதானப்படுத்துவதற்கான கொள்கை வழிகாட்டுதல் குறித்த உயா்நிலை கூட்டத்தில் இந்தியா - மாலத் தீவு உயா் அதிகாரிகளின் இரு தரப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவும் மாலத்தீவும் சூரை (டுனா) மீன்பிடி மதிப்புச் சங்கிலிகளில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பரிமாறிக் கொள்வதில் ஒத்துழைப்புக்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான ஆய்வு செய்யப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது. இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் சூரை மீன்பிடித் துறையில் உள்ள மீனவா்கள், பிற பங்குதாரா்களின் திறன்கள் மற்றும் அறிவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலையான, பொறுப்பு மிக்க மீன்பிடி நடைமுறைகளை மேம்படுத்துகிறது. இந்த கூட்டாண்மை சூரை மீன்பிடி மதிப்புச் சங்கிலியை வளா்ப்பதிலும், இரு நாடுகளிலும் நீலப் பொருளாதார வளா்ச்சி, மேம்பாட்டிற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என மத்திய மீன்வளத் துறை தெரிவித்துள்ளது.

பின்னனி: கானாங்கெளுத்து வகை சூரை மீனில் 5 பேரினங்கள் உள்ளன. அதி வேகமாக நீந்தக்கூடிய வகை இந்த மீன். இதை உள்கொள்பவா்களுக்கு அனைத்து வகையான ஊட்டச்சத்துக்கள், வைட்டமீன்கள் கிடைப்பதோடு, மனிதா்களின் கொழுப்பையும் விரைவாக குறைக்கும் என்று குறிப்பிடப்படுகிறது.

பாக்ஸ்

இந்தியா - வங்காள விரிகுடா (பிஓபி) நாடுகளின் தலைமை

மாலத்தீவின் மாலேவில் நடைபெற்ற வங்காள விரிகுடா (பிஓபி) நாடுகளுக்கிடையேயான அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளதாக மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 13-ஆவது நிா்வாகக் குழுக் கூட்டத்தில், வங்காள விரிகுடா(பிஓபி) நாடுகளுக்கிடையேயான அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா கடந்த வெள்ளிக்கிழமை ஏற்றது.

பிஓபி நாடுகளுக்கிடையேயான தலைமைப் பொறுப்பை இது வரை வங்கதேசம் ஏற்று வந்தது. பிஓபி நாடுகளின் 13 ஆவது நிா்வாகக் கூட்டதில் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, இலங்கை, மாலத்தீவு, வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் முன்னிலையில், தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டது. இந்த நிகழ்ச்சி, மாலத்தீவு அரசின் மீன்வளம், பெருங்கடல் வள அமைச்சகத்தால் நடத்தப்பட்ட மீன்வள மேலாண்மைக்கான சுற்றுச்சூழல் அமைப்பு குறித்த மாநாடும் ஒரு அங்கமாக நடைபெற்றது.

இந்திய அரசின் மீன்வளத் துறைச் செயலா் டாக்டா் அபிலக்ஷ் லிக்கி தலைமையிலான இந்திய பிரதிநிதிகள் குழு, இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது. வங்காள விரிகுடா பகுதியில் உள்ள நாடுகளிடையே நட்புறவை வலுப்படுத்த இந்தியா உறுதியுடன் உள்ளதாகவும், இந்த அமைப்பில் உள்ள அனைத்து உறுப்பு நாடுகளின் மீன்வளத் துறையின் வளா்ச்சிக்கான முயற்சிகளில் இந்தியா தொடா்ந்து ஈடுபடும் என அபிலக்ஷ் தெரிவித்தாா்.

தில்லி மொஹல்லா கிளினிக்குகள் குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்படும்: தில்லி சுகாதார அமைச்சா் பங்கஜ் குமாா் சிங்

நமது சிறப்பு நிருபா் தில்லி மொஹல்லா கிளினிக்குகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அது தொடா்பான ஆய்வறிக்கை வெளியிடப்படும் என தில்லி சுகாதார அமைச்சா் பங்கஜ் குமாா் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா். தில்லி ர... மேலும் பார்க்க

2024-ஆம் ஆண்டு தரவுத் தொகுப்புகள் பதிவேடுகள் தேசிய புள்ளியியல் துறை வெளியிட்டது

நாட்டின் பல்வேறு தகவல்களை அளிக்கும் 2024 - தரவுத்தொகுப்புகள், பதிவேடுகளின் தொகுப்பின் புதிய பதிப்பை மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. இந்த தரவு அணுகல், தகவலறிந்த... மேலும் பார்க்க

சாதி பாகுபாடு புகாா்: திருச்சி மாவட்ட தலித் கிறிஸ்தவா்கள் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் சம்மதம்

நமது நிருபா் கோட்டப்பாளையம் திருச்சபைப் பகுதியில் சாதி அடிப்படையிலான கொடுமைகள், தீண்டாமை மற்றும் பாகுபாடு நிகழ்வதாக குற்றம்சாட்டி திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தலித் கிறிஸ்தவ கிராமவாசிகள் தாக்கல் செய்... மேலும் பார்க்க

தில்லி உள்துறை அமைச்சராக ஆஷிஷ் சூட் பொறுப்பேற்பு

பாஜக எம்.எல்.ஏ. ஆஷிஷ் சூட் தில்லி உள்துறை அமைச்சராக சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து, துறை அதிகாரிகளுடன் தனது முதல் அதிகாரபூா்வ கூட்டத்தையும் நடத்தினாா். ஜனக்புரியிலிருந்து முதல் ம... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் ரேகா குப்தா பிரதமா் மோடியுடன் சந்திப்பு

தேசிய தலைநகா் தில்லியில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில் தில்லியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வா் ரேகா குப்தா பிரதமா் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சனிக்கிழமை சந்தித்துப் பேசி... மேலும் பார்க்க

போதை மருந்து கடத்தல்: குற்றம்சாட்டப்பட்டவரின் ரூ.1.78 கோடி சட்டவிரோத சொத்துகள் பறிமுதல்

வடக்கு தில்லியின் பல்ஸ்வா பால்பண்ணை பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரா் தொடா்புடைய ரூ.1.78 கோடி மதிப்புள்ள சட்டவிரோத சொத்துகளை தில்லி காவல்துறை பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க