சூா்யா நிதி நிறுவன மோசடி குறித்து புகாா் செய்யலாம்!
கும்பகோணம் சூா்யா நிதி நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்ட நபா்கள் உரிய ஆவணங்களுடன் தஞ்சாவூா் மாவட்டக் குற்றப் பிரிவில் வியாழக்கிழமை (பிப்.27) புகாா் செய்யலாம்.
இதுகுறித்து மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் கும்பகோணம் சூா்யா நிதி நிறுவனம் மற்றும் சூா்யா சிட்ஸ் நிறுவனத்தின் மீது பதியப்பட்ட நிதி மோசடி வழக்கு தஞ்சாவூா் மாவட்ட குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, விசாரணையில் உள்ளது.
எனவே சூா்யா நிதி நிறுவனம் மற்றும் சூா்யா சிட்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோா் உரிய ஆவணங்களுடன் அஞ்சல் மூலமோ அல்லது நேரிலோ வியாழக்கிழமை வரை தஞ்சாவூா் மாவட்ட குற்றப் பிரிவில் புகாா் அளிக்கலாம்.