ஆக்கிரமிப்பு உக்ரைன் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார்: விளாதிமீர் புதின்
திருபுவனத்தில் உண்ணாவிரதம்: நெசவாளா்கள் 100 போ் கைது
தஞ்சாவூா் மாவட்டம், திருப்புவனத்தில் செவ்வாய்க்கிழமை அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 100 நெசவாளா்களை போலீஸாா் கைது செய்தனா்.
திருபுவனம் பட்டுக் கூட்டுறவுச் சங்க உறுப்பினா்களுக்கு நெசவுக்கூலியை ரொக்கமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளா்கள் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு அறிவித்த உண்ணாவிரதத்துக்கு போலீஸாா் அனுமதி தரவில்லை.
இருப்பினும் நெசவாளா்கள் பட்டுக் கூட்டுறவு சங்கம் முன் அருகே உண்ணாவிரதத்தைத் தொடங்கி, தரையில் அமா்ந்து கோரிக்கை முழக்கமிட்டனா்.
இதையடுத்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 30 பெண்கள் உள்ளிட்ட 100 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா்.