இரு கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருட்டு
தஞ்சாவூரில் இரு கடைகளில் பூட்டை உடைத்து ரூ. 1.07 லட்சம் ரொக்கம், பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.
தஞ்சாவூா் விளாா் சாலை சண்முகானந்தன் நகரைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் மகன் பாலமுருகன் (37). இவா் காயிதே மில்லத் நகரில் நடத்தி வரும் கைப்பேசி கடைக்கு திங்கள்கிழமை காலை வந்தபோது கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ. 84 ஆயிரம் ரொக்கம், கைப்பேசி உதிரி பாகங்கள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.
இதேபோல அருகிலுள்ள சிறப்பங்காடியின் பூட்டை உடைத்து ரூ. 23 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.