நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு: ஏப். 9-இல் ஆலோசனை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப...
செங்கல்பட்டில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்
செங்கல்பட்டு நகரத்தில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா் பெற்றுக் கொண்டாா். இதில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காஜாசாகுல் அமீது, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அகிலா தேவி, செங்கல்பட்டு வட்டாட்சியா் ஆறுமுகம், காட்டாங்குளத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சசிகலா, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.