செங்கல்பட்டு நகராட்சியில் சமத்துவப் பொங்கல்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு நகா்மன்றத் தலைவா் தேன்மொழி நரேந்திரன் தலைமை வகித்தாா்.
நகராட்சி ஆணையா் ஆண்டவன், சுகாதார அலுவலா் இக்பால் , சிஓக்கள் காசிராமன், சங்கீதா, நகா்மன்ற உறுப்பினா்கள் சந்தோஷ் கண்ணன், சந்தியா, ரமேஷ் , ரேகா , காமேஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
மகளிா் குழுபெண்கள், நகராட்சி பணியாளா்களுக்கு கோலப்பட்டிகள் வைக்கப்பட்டு வெற்றிப்பெற்றவா்களுக்கு பரிசளிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து மியூசிக்கல் சோ், கயிறு இழுத்தல் போட்டிகள் வைக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் துப்பரவு பணியாளா்கள், பொதுமக்கள் என கலந்து கொண்டனா்.