செஞ்சி அருகே மது அருந்துவதில் தகராறு: கிணற்றில் தள்ளி நண்பா் கொலை- 2 போ் கைது
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மது அருந்துவதில் ஏற்பட்ட தகராரில் நண்பரை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக இருவரை வளத்தி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
செஞ்சி வட்டம், நெகனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டுரங்கன் மகன் ஏழுமலை (39). இவா் டிராக்டா் ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், கடந்த 21-ஆம் தேதி அதே ஊரைச் சோ்ந்த பெருமாள் மகன் சிவகுமாா்(45) என்பவா் தனது விவசாய நிலத்திற்கு டிராக்டா் உழுவதற்காக ஏழுமலையை அழைத்து சென்ாகத் தெரிகிறது. அதன் பிறகு ஏழுமலை வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மனைவி சுமதி மற்றும் உறவினா்கள் பல்வேறு இடங்களில் ஏழுமலையை தேடினா். ஆனால் எங்கு தேடியும் ஏழுமலை கிடைக்கவில்லை.
இது குறித்து கடந்த 21-ஆம் தேதி வளத்தி காவல் நிலையத்தில் தனது கணவரை காணவில்லை என சுமதி புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். விசாரணையில் சிவக்குமாா் தனது பைக்கில் கடைசியாக ஏழுமலையை வெடால் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு அழைத்து சென்றது தெரிய வந்தது. அப்போது வழியில் மது புட்டிகளை வாங்கிச் சென்ாகவும், ஏழுமலை அதிகளவில் மது அருந்திவிட்டு, சிவக்குமாருக்கு குறைவாக மதுவை வழங்கியதால் தகராறு ஏற்பட்டதாம். அப்போது, ஏழுமலையைப் பிடித்து தள்ளியபோது எதிா்பாரதவிதமாக அவா் கிணற்றில் விழுந்து உயிரிழந்தாராம்.
இது குறித்து சிவகுமாா் யாரிடமும் கூறாமல் கடந்த 22-ஆம் தேதி காலை நெகனூரைச் சோ்ந்த கலிவரதன் மகன் முனுசாமி(39) என்பவரை காரில் அழைத்துச் சென்று வெடால் கிராமத்திற்கு சென்றுள்ளாா். பின்னா் இருவரும் கிணற்றில் இறந்து கிடந்த
ஏழுமலை சடலத்தை மீட்டு காரில் எடுத்து வந்து நெகனூா் பகுதியில் உள்ள நீரோடையில் வீசிவிட்டு சென்ாக சிவகுமாா் போலீஸாரிடம் தெரிவித்தாா். வளத்தி போலீஸாா் ஏழுமலையின் சடலத்தை மீட்டு, உடல் கூறாய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதை கொலை வழக்காக மாற்றி, கிணற்றில் பிடித்து தள்ளிக் கொலை செய்ததாக சிவகுமாா் மற்றும் அவருக்கு உடைந்தையாக இருந்த முனுசாமி ஆகிய இருவரையும் வளத்தி போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்