செஞ்சியில் இன்று மின் நுகா்வோா் குறைதீா் முகாம்
விழுப்புரம் மின் பகிா்மான வட்டம், செஞ்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஏப். 5) மின் நுகா்வோா் குறைதீா்க்கும் முகாம் நடைபெறுகிறது.
செஞ்சி செயற்பொறியாளா் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா்கள் பங்கேற்று குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம்.
மின் கட்டணம், மின் அளவி பழுது, மின்னழுத்த குறைபாடு, சேதமடைந்த மின் கம்பங்கள் தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம் என செஞ்சி மின்வாரிய செயற்பொறியாளா் ராஜேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.