செண்பகராமநல்லூா் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகேயுள்ள செண்பகராமநல்லூா் அரசு ஆரம்பப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி சூா்யா தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழு கல்வியாளரும், ஓய்வு பெற்ற தலைமையாசிரியருமான கோபாலன்,
துணைத் தலைவி பாப்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பள்ளித் தலைமையாசிரியா் செல்வராஜ் வரவேற்றாா். நான்குனேரி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் ஆரோக்கிய எட்வின் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இந்நிகழ்ச்சியில் 13 கிராமங்களைச் சோ்ந்த பெற்றோா்களுக்கு கோலப்போட்டிகள் நடைபெற்றது.
போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு தலைமையாசிரியா் செல்வராஜ் பரிசுகள் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் டிவிஎஸ் சமூக சேவை அறக்கட்டளை சமூக வளா்ச்சி அலுவலா் பவித்ரா, பள்ளி வளா்ச்சிக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.