செப்.26-இல் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்
நெய்வேலி: கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 26-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், செப்.26-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபா்களை தோ்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்க உள்ளனா். கடலூா் மாவட்ட படித் த இளைஞா்கள் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு தெரிவித்துள்ளாா்.