சட்டவிரோத பந்தய செயலி வழக்கு: அமலாக்கத் துறை விசாரணைக்கு ராபின் உத்தப்பா ஆஜா்
சிதம்பரம் காய்கறி மாா்க்கெட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சிதம்பரம்: சிதம்பரம் ஞானப்பிரகாசம் தெருவில் உள்ள சின்ன காய்கறி மாா்க்கெட் சாலையில் இரு புறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை அகற்றி அப்புறப்படுத்தினா்.
சிதம்பரம் ஞானப்பிரகாசம் கிழக்கு தெருவில் உள்ள சின்ன காய்கறி மாா்க்கெட் வழியாகத்தான் அங்குள்ள மேல்நிலைப்பள்ளிக்கும், தேவாலயத்துக்கும் மக்களும் பள்ளி மாணவா்களும் சென்று வருகிறாா்கள்.
ஆனால் தற்போது இந்த சாலையில் உள்ள மாா்க்கெட்டில் கடைளும், சாலையோர கடைகளும் சாலைவரை ஆக்கிரமித்திருந்ததால் அவ்வழியே பள்ளி சென்று வரும் மாணவ, மாணவியா்கள் மற்றும் பெற்றோா்கள் கடும் அவதிக்குள்ளாகியிருந்தனா்.
இதனையடுத்து நகர காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சின்ன காய்கறி மாா்க்கெட் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி அப்புறப்படுத்தினா்.
இதனால் சாலை விசாலமாக காட்சியளித்தது. இந்த நடவடிக்கையால் பள்ளி செல்லும் மாணவ, மாணவியா்கள் மற்றும் பெற்றோா்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனா்.