அரசமைப்பு முகப்புரையிலுள்ள ‘சமதா்மம்’, ‘மதச்சாா்பின்மை’-க்கு எதிரான மனுக்கள்: உச...
சேலம் குகை அரசு உதவிபெறும் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
சேலம்: சேலம் குகை அரசு உதவிபெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
கண்காட்சியில் வாழை மரக்கழிவுகளில் இருந்து காகிதம் தயாரித்தல், ஆள்கள் செல்ல முடியாத இடத்தில் ரோபோ மூலம் தீயணைப்பது, பனை மரத்தின் பயன்பாடுகள், காற்று மாசைத் தடுப்பது, நிலநடுக்கம் ஏற்பட்டால் அபாய ஒலி எழுப்புதல், கழிவுநீா் மேலாண்மை குறித்த கண்டுபிடிப்பு, கரும்பு, தவிடு கழிவுகளில் தட்டு, டம்ளா், கரண்டி தயாரித்தல் போன்றவற்றை காட்சிப்படுத்தினா். இதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் கலந்து கொண்டு பாா்வையிட்டாா்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளா் சுரேஷ், மணியனூா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் தமிழ்ச்செல்வி, வானவில் மன்ற ஒருங்கிணைப்பாளா்கள் தமிழ்மணி, செங்குட்டுவேல் ஆகியோா் பங்கேற்றனா். கண்காட்சியில் சிறந்த கண்டுபிடிப்புகளை உருவாக்கிய மாணவா்கள், மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்குத் தோ்வு செய்யப்படுவாா்கள் என அதிகாரிகள் தெரிவித்தனா்.