சொத்து தகராறில் சித்தப்பாவை வெட்டியவா் கைது
கந்திலி அருகே சொத்து தகராறில் சித்தப்பாவை வெட்டியவா் கைது செய்யப்பட்டாா்.
கந்திலி அருகே ஆவல்நாயக்கன்பட்டி பகுதியை சோ்ந்த மாது (45). கட்டடத் தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அவரது அண்ணனான பூபதி என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை மாது காக்கங்கரை பேருந்து நிலையம் பகுதியில் நின்று கொண்டு இருந்தாா். அப்போது அந்த பகுதியில் இருந்த கூலி தொழிலாளியான பூபதி மகன் திருப்பதிக்கும் (25), மாதுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதில் ஆத்திரமடைந்த திருப்பதி தன்னிடம் இருந்த அரிவாளால் மாதுவை வெட்டினாா். இதில் காயமடைந்த மாது கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
கந்திலி போலீஸாா் வழக்குப்பதிந்து சுந்தரம்பள்ளி பகுதியில் பதுங்கி இருந்த திருப்பதியை வியாழக்கிழமை கைது செய்தனா்.