நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்
5,55,000 மரக்கன்றுகள் நட இலக்கு: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
திருப்பத்தூா் மாவட்டத்தில் 5,55,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ அ.நல்லதம்பி பணியை தொடங்கி வைத்தனா்.
தமிழ்நாடு வனத்துறை சாா்பில், பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு விசமங்கலம் ஊராட்சி அரசு
மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ அ.நல்லதம்பி ஆகியோா் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தனா்.
பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தில் திருப்பத்தூா் மாவட்ட பசுமை குழுவில் 5,55,000 மரங்களை நட இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து வெவ்வேறு பகுதிகளில் 5,000 மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.
இதில், மாவட்ட வன அலுவலா் மகேந்திரன், முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணியகோட்டி, வனசரகா்கள் சோழராஜன், சந்தோஷ் குமாா்,
வனக்கோட்ட வனப்பணியாளா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.