செய்திகள் :

சொந்தமாக தீவு வைத்திருக்கும் பிரபல நடிகை; யார் இந்த ஜாக்குலின் பெர்னாண்டஸ்?

post image

இலங்கையின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு தீவை பாலிவுட் பிரபல நடிகை வாங்கியுள்ளார்.

நான்கு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தீவை பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், கடந்த 2012 ஆம் ஆண்டு சுமார் 3.5 கோடிக்கு ரூபாய் மதிப்பில் வாங்கியதாக கூறப்படுகிறது.

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் குமார் சங்கக்காரவின் தனியார் தீவுக்கு அருகில் இந்தத் தீவு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தீவு ஆடம்பர ரியல் எஸ்டேட்டுகளுக்கான ஒரு முக்கியமான இடமாக மாறியுள்ளது.

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், இந்த தீவை வாங்கி அதில் வில்லா கட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் இந்த தீவை ஒரு தனியார் இல்லமாகப் பயன்படுத்துகிறாரா அல்லது வணிக நோக்கங்களுக்காக குத்தகைக்கு விடுகிறாரா என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை.

யார் இந்த ஜாக்குலின் பெர்னாண்டஸ்?

2006 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் இலங்கை பட்டத்தை வென்றவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு வெளியான அலாடின் என்ற நகைச்சுவை திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

பின்னர் அவர் மர்டர் 2, ஹவுஸ்ஃபுல் 2, ரேஸ் 2 மற்றும் கிக் போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

CA Knowledge படி, அவரது நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.116 கோடி ($14 மில்லியன்) என கூறப்பட்டுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளாக இவர் நடித்த படங்கள் எதிர் பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. தற்போது ஜாக்குலின் ஹவுஸ்ஃபுல் 5 என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

’நான் மாடர்ன் பொண்ணு, அழுமூஞ்சி கிடையாது, அப்படி நடிக்க பிடிக்கல’ - நடிகை அஸ்வினி ஓப்பன் டாக்!

''நான் கன்னடப்பொண்ணு. ஆனா, பிறந்து வளர்ந்ததெல்லாம் மும்பையிலதான். அப்பா அங்க பிசினஸ் பண்ணிட்டிருந்தாரு. நான் பி.எஸ்சி முடிச்சுட்டு வேலைக்கு ட்ரை பண்ணிட்டிருந்தேன். அப்ப பெங்களூர்ல எனக்கு இன்டர்வியூ வந... மேலும் பார்க்க

``மறுமணம் பண்ணிருக்கலாமேன்னு அம்மாவை இப்பவும் திட்டுவேன்!'' - `மைனா' சூசன் பேட்டி

திருமணமாகப்போகும் ஆண்கள், திருமணம் ஆன ஆண்கள் ரியல் லைஃபில் எதிர்கொள்ளப்போகும்; எதிர்கொள்ளும் பிரச்னையை மையப்படுத்திய எதிர்மறை கதாப்பாத்திரத்தால்… இப்போதும் மிரட்டிக்கொண்டிஇருப்பவர் வைத்துக்கொண்டிருப்ப... மேலும் பார்க்க

ரசிகர்கள், பயணிகள் நடிகர் மம்மூட்டியின் வீட்டில் தங்க ஏற்பாடு - ஒருநாள் வாடகை எவ்வளவு தெரியுமா?

மலையாள மெகாஸ்டார் நடிகர் மம்மூட்டி-க்கு கேரளாவில் மட்டும் அல்லாது பிற மாநிலங்களிலும் தீவிர ரசிகர்கள் உள்ளனர். கேரள மாநிலம் கொச்சி பனம்பிள்ளி நகரில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் சுமார் 10 ஆண்டுகள் வசித... மேலும் பார்க்க

வீர தீர சூரன் தயாரிப்பாளர் ரியா ஷிபு : இன்ஸ்டாகிராம் Influencer டு சினிமா Producer - சில தகவல்கள்

விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன் திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முன்பான, இசை வெளியீட்டு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அதில் தனது தீராத எனர்ஜியால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் தயாரிப்பாளர் ரியா ஷிபு.... மேலும் பார்க்க

முத்தம் கொடுத்து வரவேற்ற ரசிகை; லண்டன் சென்ற சிரஞ்சீவி நெகிழ்ச்சி... வைரல் புகைப்படம்!

தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இந்தியா முழுக்க ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். இவர் ஒரு அரசியல்வாதியும் ஆவார்.இதற்கிடையில்,... மேலும் பார்க்க

``என் காலம் எத்தனை நாளோ... அதற்குள்...'' - பின்னணிப்பாடகி சரளா இப்போது எப்படி இருக்கிறார்?

பின்னணிப்பாடகி சரளா என்றால், மூத்த தலைமுறையினருக்கு நன்கு தெரியும். இளம் தலைமுறையினர் 'பேசும் தெய்வம்' படத்தில் அவர் பாடிய ‘நூறாண்டு காலம் வாழ்க... நோய் நொடியில்லாமல் வளர்க... ஊராண்ட மன்னர் புகழ்போலே.... மேலும் பார்க்க