தேசிய ஜவுளி கழகத்தில் ரூ.6 கோடி முறைகேடு புகாா்: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ
வீர தீர சூரன் தயாரிப்பாளர் ரியா ஷிபு : இன்ஸ்டாகிராம் Influencer டு சினிமா Producer - சில தகவல்கள்
விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன் திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முன்பான, இசை வெளியீட்டு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அதில் தனது தீராத எனர்ஜியால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் தயாரிப்பாளர் ரியா ஷிபு.
விஜய் படங்களின் விநியோகஸ்தர்
ரியா, 19 வயதேயான ஒரு இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சராக அறியப்பட்டாலும், இவரின் HR Pictures நிறுவனம் மூன்று மலையாளத் திரைப்படங்களை தயாரித்து இருக்கிறது. இவரது தந்தை ஷிபு தமீன்ஸும் ஒரு தயாரிப்பாளர். விஜய் படங்களை கேரளாவில் விநியோகம் செய்தவர். அவரே ஒரு பேட்டியில், “தயாரிப்பாளர் ஆகிவிட்டாலும் விஜய் படங்களின் விநியோகஸ்தராகவே இன்றும் அறியப்படுகிறோம்,” என்று கூறி உள்ளார்.
இன்ஸ்டா Influencer
இன்ஸ்டாகிராமில் மட்டுமல்லாமல் சினிமாவிலும் நடித்துள்ளார் ரியா ஷிபு. கப் என்ற மலையாள திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார். பசில் ஜோசப், மேத்யூ தாமஸுடன் இவரும் ஒரு முக்கிய பாத்திரத்துல் அந்தப் படத்தில் நடித்து இருந்தார்
சிறுவயதில் ஓவியத்தில் தமக்கு மிகுந்த ஆர்வம் இருந்ததாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ள ரியா ஷிபு, தாம் வரைந்த பல ஓவியங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் ஸ்டார் ஆவது எப்படி?
இன்ஸ்டாகிராமில் இவருக்கு 4.5 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர். இவரது பல ரீல்கள் வைரலானவை. ஒரு வைரல் இன்ஸ்டாகிராம் ஸ்டார் ஆவது எப்படி? என வகுப்பு எடுக்கும் அளவு திறன் இருந்தாலும், வயது காரணமாக தற்போது சென்னை லயோலா கல்லூரியில் விசுவல் கம்யூனிகேஷன் படித்து வருகிறார்.
டிக்டாக், மியூசிக்கலி மற்றும் டப்ஸ்மேஷ் போன்ற ஆப்களில் தொடங்கி, இவரது இன்ஸ்டாகிராம் சக்சஸுக்கு காரணம் எடிட்டிங் திறமை தான் என்கிறார்.
திரைப்பட தயாரிப்பு குறித்து பேசிய ரியா ஷிபு, "ஒரு படத்தில் நடித்தது, திரைக்குப் பின்னால் நடக்கும் விஷயங்கள் பற்றி சில விஷயங்களைக் கற்றுக்கொடுத்தது. என் அப்பாவிடம் கேட்டு சில விஷயங்களைத் தெரிந்துகொண்டேன்" எனக் கூறியிருக்கிறார்.
இவரது சகோதரர் ஹ்ரிது ஹரூனும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play