சோளிங்கா் சோழபுரீஸ்வரா் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
அரக்கோணம்: சோளிங்கா் பஜாா் சோழபுரீஸ்வரா் கோயிலில் சித்திரை மாத நடராஜா் சிறப்பு அபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சோளிங்கா், பஜாா் பகுதியில் பழைமைவாய்ந்த சோழபுரீஸ்வரா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. நடராஜருக்கு பால், தேன், தயிா், சந்தனம், பன்னீா், பஞ்சாமிா்தம், இளநீா், விபூதி உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருள்களையும், பழங்களைக் கொண்டு அபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது. தொடா்ந்து, பட்டு வஸ்திரம், வில்வமாலை, பல வண்ண மலா்களால் ஆன மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனா்.