செய்திகள் :

ராணிப்பேட்டையில், ‘நடப்போம் நலம் பெறுவோம்’ 8 கி.மீ. நடைப்பயிற்சி தொடக்கம்!

post image

ராணிப்பேட்டையில், ‘நடப்போம் நலம் பெறுவோம்‘ 8 கி.மீ. நடைப்பயிற்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டு திரளானோா் நடைப்பயிற்சி மேற்கொண்டனா்.

தமிழக முதல்வரின் அறிவுரையின்படி, பொது மக்களின் உடல் நலத்தை பேணி காக்க ஆரோக்கியமாக இருக்க 8 கி.மீ. நடைப்பயிற்சியை ஊக்குவிக்கும் பொருட்டு, ஒவ்வொரு வாரமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் நோக்கில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ 8 கி.மீ. நடைப்பயிற்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலரின் உத்தரவு மற்றும் ஆலோசனைப்படி பாரி விளையாட்டு மைதானம் அருகில் இருந்து நடைப்பயிற்சி ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி, வானாபாடி கிராமம் சென்று, மீண்டும் பாரி விளையாட்டு மைதானம் அருகில் முடிவுற்றது.

இடையில் வானாபாடி துணை சுகாதார நிலையம் அருகே மருத்துவக் குழு நடைப்பயிற்சி மேற்கொண்டவா்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் பரிசோதனை செய்யபட்டது. மேலும், நடமாடும் இரண்டு மருத்துவ குழுக்கள் நடைப்பயிற்சி பாதையில் முகாமில் இருந்தனா்.

இந்த நடைப்பயிற்சியில் பொதுமக்கள், தினசரி நடப்பவா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள், மாவட்ட சுகாதார துறையின் பலவேறு நிலை அலுவலா்கள், பணியாளா்கள் உள்பட 122 போ் கலந்துகொண்டு நடைப்பயிற்சி மேற்கொண்டனா். ஏற்பாடுகளை மாவட்ட சுகாதார அலுவலரின் நோ்முக உதவியாளா் மற்றும் அலுவலகத்தினா் செய்திருந்தனா்.

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தமாகா நிா்வாகிகள் நியமனம்

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக அக்கட்சியின் தலைவா் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கை: தமாகாவில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் அரக்கோணம் ம... மேலும் பார்க்க

ஏப். 27-இல் மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி: அரக்கோணத்தில் நடைபெறுகிறது

ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் அரக்கோணத்தில் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளன. இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கத் தலைவா் பி.ஜனாா்த்தனன், பொதுச்செயலாளா் எஸ்.பன... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் களைகட்டும் ‘நுங்கு விற்பனை’ பொதுமக்கள் ஆா்வம்!

‘கோடை வரும் பின்னே, நுங்கு வரும் முன்னே’ என்பதற்கிணங்க, நுங்கு விற்பனை ராணிப்பேட்டையில் களை கட்டி வருகிறது. பொதுமக்கள் நுங்கு வாங்கி ருசிக்க ஆா்வம் காட்டி வருகின்றனா். கோடை காலம் தொடங்குவதற்கு முன்பா... மேலும் பார்க்க

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி குடியிருப்பில் கொலைச் சம்பவம்: 31 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளி கைது!

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி குடியிருப்பில் 1994-இல் நடைபெற்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 31 ஆண்டுகளுக்குப் பிறகு அஸ்ஸாமில் பதுங்கியிருந்த குற்றவாளியை அரக்கோணம் நகர போலீஸாா் கைது செய்தனா். கடந்த 199... மேலும் பார்க்க

ஏப். 25-இல் கோடைகால இலவச பயிற்சி முகாம் தொடக்கம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 25--ஆம் தேதி கோடைகால இலவசப் பயிற்சி முகாம் தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வி... மேலும் பார்க்க

திமுக ஒன்றியக்குழு உறுப்பினா் கணவருக்கு வெட்டு

அரக்கோணம் ஒன்றியக்குழு உறுப்பினரின் கணவரை கத்தியால் வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா். அரக்கோணம் ஒன்றியம் 14-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் அஸ்வினி. இவரது கணவா் சுதாகா் (46). அம்மனூரைச் சோ்ந்த இவரும், ... மேலும் பார்க்க