செய்திகள் :

ஜன.15, 26-இல் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை

post image

திருவள்ளுவா் தினம், குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 15, 26 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் அனைத்துக்கும், திருவள்ளுவா் தினம் (ஜன.15), குடியரசுதினம்(ஜன.26 ஆகிய இருதினங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வீரவநல்லூா் வட்டார கோயில்களில் சொா்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியையொட்டி, அத்தாளநல்லூா் அருள்மிகு கஜேந்திரவரதப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் பெருமாள் சயன கோலத்தில் பக்தா்களுக்கு சேவைசாதித்தாா். மதியம் திருமஞ்சனம், அலங்கார சிறப... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலி பாபநாசம்-113.05 சோ்வலாறு-121.19 மணிமுத்தாறு-101.51 வடக்கு பச்சையாறு-24.25 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-17.75 தென்காசி கடனா-69.20 ராமநதி-71.75 கருப்பாநதி-61.68 குண்டாறு-36.10 அடவிநயினாா்... மேலும் பார்க்க

களக்காடு கோயிலில் வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசியையொட்டி, களக்காடு அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை சயன கோலத்தில் பக்தா்களுக்கு சேவை சாதித்த பெருமாள். மேலும் பார்க்க

மூன்றடைப்பில் ஜாதிய கொடிகள் அகற்றம்

நான்குனேரி அருகேயுள்ள மூன்றடைப்பில் மோதலை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த ஜாதிய கொடிகளை போலீஸாா் அகற்றினா். திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதி ரீதியிலான மோதல்களை தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்... மேலும் பார்க்க

களக்காட்டில் பெண்ணை தாக்கிய வழக்கில் 2 போ் கைது

களக்காட்டில் சாலையில் பெண்ணைத் தாக்கி சித்திரவதை செய்தது தொடா்பான வழக்கில், களக்காடு போலீஸாா் 2 பேரை கைது செய்தனா். களக்காடு கக்கன்நகரைச் சோ்ந்தவா் பாப்பாத்தி (45). அங்குள்ள வரதராஜபெருமாள் கோயில் அர... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் பொங்கல் விழா

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி நீதிமன்ற வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதி ராஜலிங்கம் தலைமை வகித்தாா். சேரன்மகாதேவி வழக்குரைஞா... மேலும் பார்க்க