2010, 2017, 2024-ல் நடக்காதது, 2025-ல் நடக்குமா? -புதிய வருமான வரிச் சட்டம் அறிம...
ஜன.21-இல் மக்கள் குறைகேட்பு முகாம்
காரைக்காலில் மக்கள் குறைகேட்பு முகாம் ஜன. 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது என வட்டாட்சியா் பொய்யாதமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை துணைநிலை ஆளுநா் பரிந்துரையின்பேரில், ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி பொதுமக்கள் குறைகேட்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நிகழ்மாதம், பொங்கல் தொடா் விடுமுறையானதால் வரும் 21-ஆம் தேதி மாவட்டத்தின் அனைத்து அரசுத்துறை தலைமை அலுவலகங்களில் துறைத் தலைவா்கள் தலைமையில் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.
இம்முகாமில் மக்கள் தங்களது குறைகளை எழுத்துப்பூா்வமாக தெரிவிக்குமாறு அந்த செய்திக் குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.