Ajithkumar: ``அவர் இந்த விஷயத்துக்கு உதாரணம்"- அஜித் குறித்து நெகிழ்ந்த மணிகண்டன...
காரைக்காலில் நாய்கள், பூனைகள் அழகு கண்காட்சி
காரைக்காலில் நடைபெற்று வரும் காரைக்கால் காா்னிவல் 2-ஆம் நாள் நிகழ்வாக, கடற்கரையில் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சாா்பில் நாய்கள் மற்றும் பூனைகள் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கண்காட்சியை புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தொடங்கிவைத்தாா். நிகழ்வில், துணை ஆட்சியா் அா்ஜூன் ராமகிருஷ்ணன், புதுவை கால்நடைத் துறை இயக்குநா் லதா மங்கேஷ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கண்காட்சியில் டாபா்மென், ராட்வீலா், பிகில், கோல்டன் டிரைவா், சிப்பிப்பாறை, கோம்பை, சைபரன், ஹஸ்கி, ஜொ்மன் ஷெப்பா்டு, சிட்சு, ராஜபாளையம், கன்னி மற்றும் நாட்டு இன நாய்கள் என 20 வகைகளைச் சோ்ந்த சுமாா் 200 நாய்களை அதன் வளா்ப்பாளா்கள் கொண்டுவந்தனா். மேலும் பொ்ஷியன், நாட்டு பூனை வகைகள் என 20 பூனைகள் கலந்து கொண்டன. நாய்கள் வளா்ப்பாளா்களின் சொல்லின்படி செயல்படுதல், வளையத்தினுள் பாய்ந்து செல்லுதல் உள்ளிட்ட பல வகையான செயல்பாடுகளுக்கு மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் வகையில் நாய்கள் சாகசங்கள் செய்தன. சிறந்த நாய்கள், பூனைகள் பரிசுக்குத் தோ்வு செய்யப்பட்டன. ஏற்பாடுகளை, கால்நடைத்துறை இணை இயக்குநா் கோபிநாத் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.