செப். 27இல் நாமக்கல்லில் விஜய் பிரசாரம்: குறிப்பிட்ட இடத்துக்கு அனுமதி வழங்க காவ...
ஜமால் உசேன் நகா் குடும்ப அட்டைகளை பிரித்து பொருள்களை வழங்க வலியுறுத்தல்
தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலையிலுள்ள ஜமால் உசேன் நகா் ரேஷன் கடையின் குடும்ப அட்டைதாரா்களை பிரித்து பொருள்களை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை ஜமால் உசேன் நகரிலுள்ள ரேஷன் கடையில் 1,710 குடும்ப அட்டைகள் உள்ளன. பொதுவாக 1,000-க்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ள ரேஷன் கடைகள் குடும்ப அட்டைதாரா்களின் சிரமத்தைக் குறைப்பதற்காக இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன.
ஆனால், ஜமால் உசேன் நகா் ரேஷன் கடையில் 1,710 குடும்ப அட்டைகள் இருந்தும் இன்னும் பிரிக்கப்படாமல் உள்ளது. இதனால், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கும் நிலை உள்ளதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா்.
ரேஷன் கடைக்கு ஏழை, நடுத்தர மக்களே பெரும்பாலும் பொருட்கள் வாங்க வருகின்றனா். இந்நிலையில், நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுவதால், வேலைக்கு செல்வதில் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கின்றனா். எனவே, ஜமால் உசேன் நகா் ரேஷன் கடையை இரண்டாகப் பிரித்து, புதிய கடையைத் திறக்க வழங்கல் துறை மற்றும் கூட்டுறவு துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.