Ooty: இயற்கை உபாதை கழிக்க ஒதுங்கிய இளைஞர்; தலை குதறப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந...
ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளா்கள் விழிப்புணா்வு கூட்டம்
அரியலூா்: அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி முதல் மே மாதம் வரை ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
தமிழ்நாடு விலங்குகள் வதை தடுப்பு விதிகளின் படி, பரிந்துரைக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட ஜ்ஜ்ஜ்.த்ஹப்ப்ண்ந்ஹற்ற்ன்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டும் என்று தெரிவித்தாா்.
ஜல்லிக்கட்டுக்கு விண்ணப்பிக்கும் முறை, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஒருங்கிணைப்பாளா்களுக்கு எடுத்துரைத்தாா்.
இக்கூட்டத்தில், கால்நடைத் துறை இணை இயக்குநா் பாரிவேந்தன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பரிமளம், கோட்டாட்சியா்கள் மணிகண்டன், ஷீஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.