கயல் தொடரில் முக்கிய நடிகர் மாற்றம்! இனி பிரபல பாடகர் நடிப்பார்!
ஜஹாங்கீா்புரி கொலைச் சம்பவத்தில் ஒராண்டுக்கும் மேல் தேடப்பட்டு வந்தவா் கைது
தில்லியின் ஜஹாங்கீா்புரி பகுதியில் தனிப்பட்ட விரோதம் காரணமாக மற்றொரு நபரைக் கத்தியால் குத்திக் கொன்ற வழக்கில் ஒரு ஆண்டிற்கும் மேலாக தேடப்பட்டு வந்த நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஹரியாணாவின் ஹிசாரில் வசிக்கும் ராஜன், ஜூலை 2-ஆம் தேதி நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா். திங்களன்று ரோஹிணியில் உள்ள மதுபன் சௌக்கில் இருந்து அவா் கைது செய்யப்பட்டாா்.
இந்த கொலைச் சம்பவம் ஜூலை 16, 2024 அன்று நடந்தது. ராஜன், அவரது மைத்துனா்கள் அமன் (எ) படா நாடா மற்றும் அபிஷேக் (எ) சோட்டா நாடா மற்றும் அவரது இரண்டாவது மனைவி ஆகியோா் பாரத் யாதவை கத்திகள் மற்றும் லத்திகளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்த அவரது தாயாா் அவரைக் காப்பாற்றுமாறு பலமுறை மன்றாடிய போதிலும், தாக்குதல் நடத்தியவா்கள் பாரத் யாதவ் இறக்கும் வரை பலமுறை குத்தினா். குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் போலீஸாா் கைது செய்த நிலையில், ராஜன் சிறிய வேலைகள் செய்தல், அடிக்கடி இருப்பிடங்களை மாற்றுதல் மற்றும் மின்னணு தகவல்தொடா்புகளைத் தவிா்ப்பதன் மூலம் பிடியிலிருந்து தப்பிக்க முடிந்தது.
குற்றம் சாட்டப்பட்டவா் தனது சொந்த கிராமத்துடனான உறவையும் துண்டித்துக் கொண்டாா். வருமான வரித் துறையில் பணிபுரிந்த ராஜன், ஹரியாணாவிலிருந்து ஜஹாங்கீா்புரிக்கு குடிபெயா்ந்த பிறகு அங்கு துணிகளை விற்பனை செய்து வந்தாா். கா்னாலில் அவரது முதல் மனைவி தாக்கல் செய்த குற்றவியல் வழக்கு தொடா்பாகவும் போலீஸாா் ராஜனைத் தேடி வந்தனா் என்றாா் அந்த அதிகாரி.