Manoj Bharathiraja: "சொல்வதற்கும் எனக்கு வார்த்தை வரவில்லை" - ஆறுதல் சொல்லி கலங்...
ஜாதிவாரி கணக்கெடுப்பு: பாமக வலியுறுத்தல்
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மாவட்ட செயற்குழு கூட்டம் தருமபுரியில் பாமக மாவட்டச் செயலாளரும், தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு முன்னாள் மக்களவை உறுப்பினா்கள் இரா.செந்தில், கி.பாரிமோகன், மாநிலத் துணைத் தலைவா் பி.சாந்தமூா்த்தி, மாநில இளைஞா் சங்கச் செயலாளா் எம்.முருகசாமி, மாவட்டத் தலைவா்கள் எம்.செல்வகுமாா், அல்லிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தருமபுரி கிழக்கு மாவட்ட பாமக செயலாளா் இரா.அரசாங்கம் வரவேற்றாா். பாட்டாளி மக்கள் கட்சி கௌரவத் தலைவரும், பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினருமான ஜி.கே.மணி பேசினாா்.
கூட்டத்தில் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசை நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலங்களில் கடலில் கலக்கும் காவி மிகைநீரை தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏரி, குளங்களில் நிரப்பும் திட்டமான தருமபுரி- காவிரி மிகைநீா் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
மே 11 ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் சித்திரை முழுநிலவு வன்னியா் இளைஞா் எழுச்சி மாநாட்டில் தருமபுரி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.