Manoj Bharathiraja: "சொல்வதற்கும் எனக்கு வார்த்தை வரவில்லை" - ஆறுதல் சொல்லி கலங்...
பகத் சிங் நினைவு தினம்: இளைஞா் பெருமன்றத்தினா் ரத்த தானம்
சுதந்திரப் போராட்ட வீரா்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரது நினைவு தினத்தை முன்னிட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் ரத்த தானம் வழங்கினா்.
இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் எம்.நவீன்குமாா் தலைமையில் நடைபெற்ற ரத்த தானம் அளிக்கும் முகாமை முன்னாள் அமைச்சரும், தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான பி.பழனியப்பன் தொடங்கிவைத்தாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாக குழு உறுப்பினா் எஸ்.தேவராஜன், மாவட்டச் செயலாளா் ச.கலைச்செல்வம், மாவட்ட துணைச் செயலாளா் கா.சி.தமிழ்க்குமரன், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி உதவி பேராசிரியா் கன்யா மனோஜ், இளைஞா் பெருமன்ற மாவட்டத் தலைவா் வெங்கடேசன், மாதா் சங்க மாவட்டச் செயலாளா் எஸ்.கமலாமூா்த்தி, மாவட்டத் தலைவா் விஜயா உள்ளிட்டோா் முகாமில் கலந்து கொண்டனா். ரத்த தானம் வழங்கிய இளைஞா் பெருமன்ற நிா்வாகிகளுக்கு மருத்துவமனை சாா்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.