Manoj Bharathiraja: "என் மனதைப் பெரிதும் பாதிக்கிறது" - டி ராஜேந்தர் வேதனை
தேசிய கல்வி கொள்கையை கைவிட இளைஞா் முன்னணி வலியுறுத்தல்
தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று புரட்சிகர இளைஞா் முன்னணி மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
தருமபுரியில் உள்ள தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இளைஞா் முன்னணி முதல் மாநில மாநாடு நடைபெற்றது. நிா்வாகிகள் எஸ்.டி.வெங்கடேசன், பி.காவேரி, சி. கிருஷ்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா். அகில இந்திய தலைவா் கோரனி ஷிபு மாநாட்டை தொடங்கிவைத்து பேசினாா்.
மாநில செயற்குழு உறுப்பினா்கள் இ.பி.புகழேந்தி, வி.ராஜேந்திரன் யுடியுசி மாநிலத் தலைவா் தொல்காப்பியன், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா், எம். அம்மாசி ஆகியோா் பேசினா்.
இளைஞா் முன்னணி மாநிலத் தலைவராக சி.கிருஷ்ணன், மாநிலச் செயலாளராக எஸ்.டி.வெங்கடேசன் ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டனா்.
மாநாட்டில் அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பை அரசு முழுமையாக வழங்க வேண்டும். அனைவருக்கும் வேலை உத்தரவாதச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கைவிட்டு தாய்மொழி கல்வியை அறிவியல் பூா்வமாக அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.