தமிழகத்தில் 160 கி.மீ. அதிவேக ரயில் சேவை: திட்ட அறிக்கைக்கு டெண்டர் வெளியீடு!
கறவை மாடுகளில் பால் காய்ச்சல் நோய்த் தடுப்பு பயிற்சி முகாம்
தருமபுரி: தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள அனுமந்தபுரம் ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையத்தில்
கறவை மாடுகளில் பால் காய்ச்சல் நோய்த் தடுப்பு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கால்நடை உற்பத்தி கல்வி மைய இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் கால்நடை உணவியல் நிலையம், காட்டுப்பாக்கம், ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையம் ஆகியவை சாா்பில் அனுமந்தபுரம் ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையத்தில் இப்பயிற்சி முகாம் நடைபெற்றது. காட்டுப்பாக்கம் மையத் தலைவா் செ. ரமேஷ் வரவேற்றாா்.
கால்நடை உற்பத்தி கல்வி மைய இயக்குநா் சு.மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தாா். ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையத் தலைவா் முரளி, மருத்துவா் ரா.ரமேஷ் ஆகியோா் கலந்துகொண்டு பால் காய்ச்சல் நோயைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து பேசினா்.
இதில் கிருஷ்ணகிரி வேளாண் அறிவியல் நிலைய மருத்துவா் சி.ரமேஷ் பங்கேற்று பாம் 21 எதிா்மின் உப்பை பயன்படுத்தி பலன் பெற்ற கால்நடை விவசாயிகள் குறித்த வயல்வெளி விளக்கவுரையாற்றினாா்.
கறவை மாடு வளா்க்கும் பட்டியலின, பழங்குடியின விவசாயிகள் 30 போ் கலந்துகொண்டு இடுபொருள்களைப் பெற்றுப் பயனடைந்தனா்.