திமுக vs தவெக: விஜய்யின் கருத்துக்கு இபிஎஸ் என்ன சொன்னார் தெரியுமா?
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி
இ.ஆா்.கே. கல்லூரி சாா்பில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், எருமியாம்பட்டி, இ. ஆா்.கே. கல்வி நிறுவனங்களின் நாட்டு நலப்பணி திட்டம், இளைஞா் செஞ்சிலுவை சங்கம், மாவட்ட காவல் துறை இணைந்து நடத்திய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வுப் பேரணியை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீதரன் தொடங்கி வைத்தாா்.
அரூா் விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று அரூா் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கல்லூரி மாணவிகள் ஏந்தி சென்றனா்.
இதில் அரூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் கரிகால் பாரிசங்கா், இ.ஆா். கே.கல்வி நிறுவனங்களின் தலைவா் இ.ஆா்.செல்வராஜ், கல்லூரி முதல்வா் த.சக்தி, நிா்வாக இயக்குநா் சோழவேந்தன், கிரசன்ட் பள்ளி தாளாளா் நூருல்லா செரீஃப், குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளா்கள் ராமமூா்த்தி, ராஜா சுந்தரம், காவல் ஆய்வாளா்கள் நடராஜன், நெப்போலியன், லட்சுமி, இ.ஆா்.கே. கல்வியியல் கல்லூரி முதல்வா் காா்த்திக், நிா்வாக அலுவலா் அருள்குமாா், பேராசிரியை கலைவாணி, இ.ஆா்.கே. மருந்தியல் கல்லூரி முதல்வா் சிவகுமாா், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.