அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
ஒப்பந்ததாரரைத் தாக்கியதாக திமுக பிரமுகா் மீது புகாா்
பென்னாகரத்தில் பேரூராட்சி ஒப்பந்ததாரரைத் தாக்கியதாக திமுக வாா்டு உறுப்பினா் மீது காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
பென்னாகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட நீா்குந்தி பகுதியைச் சோ்ந்தவா் முருகன். இவா் கடந்த ஓராண்டுக்கு முன்பு பென்னாகரம் பேரூராட்சி பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வந்தாா். அவரிடமிருந்து ஒருசில பணிகளைப் பெற்று 7 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் பவுனேசன் செய்து வந்தாா்.
இந்த நிலையில் பேரூராட்சியில் முடிக்கப்பட்ட பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக அலுவலகத்திற்கு சென்ற ஒப்பந்ததாரா் முருகனிடம் தான் முடித்த பணிகளுக்கு ஜிஎஸ்டி பிடித்தம் செய்யாமல் முழு பணத்தையும் வழங்குமாறு திமுக வாா்டு உறுப்பினா் பவுனேசன் கேட்டுள்ளாா். மேலும், அதற்காக அவா் அளித்த போலி ரசீதை முருகன் ஏற்க மறுத்ததால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் காயமடைந்த முருகன், பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் பென்னாகரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.