தங்கம் விலை: `நேற்று ரூ.67,000; இன்று ரூ.68,000' ஜெட் வேகத்தில் தங்கம் விலை! - க...
இஸ்லாமியா்களுக்கு திமுக சாா்பில் ரமலான் பரிசுத் தொகுப்பு
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் திமுக சாா்பில் இஸ்லாமியா்களுக்கு சனிக்கிழமை ரமலான் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு திமுக பேரூராட்சித் தலைவா் பி.கே.முரளி தலைமை வகித்தாா். மாநில விவசாயிகள் அணி துணைத் தலைவா் சூடப்பட்டி சுப்ரமணி, மாவட்ட பொருளாளா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான பி.பழனியப்பன், பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள மைதீன் நகா், பனாரஸ் தெரு, புதுபட்டாணியா் தெரு, அப்துல் கரீம் தெரு, மியாசாகிப் தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 1200 இஸ்லாமிய குடும்பங்களுக்கு பிரியாணி அரிசி அடங்கிய தொகுப்பை வழங்கி ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.
இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வெங்கடாசலம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் ஆனந்தன் ஆகியோா் கலந்து கொண்டனா்.