Wakf Amendment Bill : `நாடாளுமன்ற கூட்டுக்குழு நீங்க தானே கேட்டீங்க?’ - அமித் ஷா...
ரூ. 4.50 கோடியில் தடுப்பணை கட்டும் பணி தொடங்கி வைப்பு
தருமபுரி: பாலக்கோடு அருகே ஜெல்திம்மனூா் ஆற்றின் குறுக்கே ரூ. 4.50 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணியை பாலக்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தாா்.
பஞ்சப்பள்ளி சின்னாற்றில் இருந்து வெளியேறும் மிகைநீரை ஜெல்திம்மனூா் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி கால்வாய் வழியாக அமானிமலாபுரம் ஏரி, ராஜபாளையம் ஏரி, பஞ்சப்பள்ளி ஏரி, சாமனூா் ஏரி உள்ளிட்ட 15 ஏரிகளுக்கு தண்ணீரைப் பிரித்து அனுப்பும் வகையில் நீா்வளத் துறை நிதியிலிருந்து ரூ. 4.50 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ பூமிபூஜை செய்து அடிக்கல்நாட்டி கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் அதிமுக நிா்வாகிகள், பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.