Wakf Amendment Bill : `நாடாளுமன்ற கூட்டுக்குழு நீங்க தானே கேட்டீங்க?’ - அமித் ஷா...
ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை
தருமபுரி: ரமலான் பண்டிகையையொட்டி தருமபுரியில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.
தருமபுரி நகர அனைத்து மசூதிகள் கூட்டமைப்பு சாா்பில் தருமபுரி- கிருஷ்ணகிரி சாலையில் உள்ள ஈத்கா ஏரிக்கரை மைதானத்தில் ரமலான் பண்டிகை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. சிறப்புத் தொழுகையில் தருமபுரி மாவட்ட தலைமை ஹாஜி பதல கரீம் கலந்துகொண்டாா். இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றனா். சிறப்புத் தொழுகை முடிந்த பின்னா் அவா்கள் ஒருவருக்கு ஒருவா் ஆரத் தழுவி ரமலான் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முத்தவல்லிகள் சங்கத் தலைவா் ஜப்பாா், நகர அனைத்து மசூதிகளின் கூட்டமைப்பின் செயலாளா் எக்பால், தலைவா் முனவா் ஜான், பொருளாளா் முஸ்தாக், துணைத் தலைவா் பாபு மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா். தொடா்ந்து இஸ்லாமியா்கள் ஏழைகளுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.
தருமபுரி டேகிஸ்பேட்டை, கீழ் மசூதி தெரு, முகமது அலி கிளப் சாலை, மதிகோன்பாளையம், வி.ஜெட்டிஅள்ளி, வட்டார வளா்ச்சி அலுவலா் குடியிருப்பு காலனி, அண்ணாநகா் ஆகிய இடங்களில் உள்ள மசூதிகள் மற்றும் தருமபுரி நகரைச் சுற்றியுள்ள அனைத்து மசூதிகளிலும் ரமலான் பண்டிகை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.
இதேபோல மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான தொப்பூா், பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், பாப்பாரப்பட்டி, ஏரியூா், கடத்தூா், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா், மொரப்பூா், கம்பைநல்லூா், மாரண்டஅள்ளி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள மசூதிகள், பள்ளிவாசல்களில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனா்.