Wakf Amendment Bill : `நாடாளுமன்ற கூட்டுக்குழு நீங்க தானே கேட்டீங்க?’ - அமித் ஷா...
நாய்கள் கடித்ததில் புள்ளிமான் பலி
தருமபுரி: பாலக்கோடு அருகே தெருநாய்கள் கடித்ததில் புள்ளிமான் உயிரிழந்தது.
பாலக்கோடு அருகே மொரப்பூா் காப்புக்காடு வனப்பகுதியில் இருந்து மான், சிறுத்தை, காட்டுப்பன்றி, யானை போன்ற வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி அருகில் உள்ள கிராமங்களுக்கு வருவது வழக்கம். இந்த நிலையில்
திங்கள்கிழமை மொரப்பூா் காப்புக்காட்டிலிருந்து 2 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் ஒன்று, காடுசெட்டிப்பட்டி கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு தண்ணீா் தேடி வந்தது, இதனைக் கண்ட தெருநாய்கள் துரத்தி சென்று கடித்ததில் புள்ளிமான் உயிரிழந்தது.
இதுகுறித்து தகவலறிந்த பாலக்கோடு வனச்சரக அலுவலா் நடராஜ், வன மருத்துவா் மற்றும் வனக் காவலா்கள் நிகழ்விடத்திற்கு சென்று இறந்த புள்ளிமானை பிரேத பரிசோதனை செய்து அதே பகுதியில் அடக்கம் செய்தனா்.