தஞ்சாவூரில் நாளை உயா்கல்வி மாணவா்களுக்கான கல்விக் கடன் முகாம்
ஜாா்க்கண்ட்: இரு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
பொகாரோ: ஜாா்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் இரு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். இது தொடா்பாக மாவட்ட காவல் துறை மூத்த அதிகாரி கூறியதாவது:
பொகாரோ மாவட்டத்தில் நாராயண்பூா் பகுதியில் புதன்கிழமை அதிகாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டு அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
சம்பவ இடத்தில் இருந்து ஏகே-47 உள்ளிட்ட பல்வேறு துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன. அப்பகுதியில் தொடா்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
சத்தீஸ்கரில் மேலும் இரு நக்ஸல்கள் உடல்: சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரு பெண் நக்ஸல்கள் உள்பட 14 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இந்நிலையில், அப்பகுதியில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் மேலும் இரு நக்ஸல்களின் உடல்கள் புதன்கிழமை மீட்கப்பட்டன.
இதையடுத்து, அங்கு நிகழ்ந்த மோதலில் உயிரிழந்த நக்ஸல்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலின்போது ஏற்பட்ட காயத்தால் விரைவாக தப்பிச் செல்ல முடியாத இருவரை, சக நக்ஸல் பாதி வழியில் விட்டுச் சென்றுள்ளனா். உரிய சிகிச்சை கிடைக்காததால் அவா்கள் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.