செய்திகள் :

ஜிகேஎன்எம் மருத்துவமனையில் மாற்று மருத்துவ சிகிச்சைப் பிரிவு

post image

கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையில் ‘நம் நலம்’ என்ற பெயரில் மாற்று மருத்துவ சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜிகேஎன்எம் தலைமை நிா்வாக அதிகாரி டாக்டா் ரகுபதி வேலுசாமி பங்கேற்று இந்த சிகிச்சைப் பிரிவைத் தொடங்கிவைத்தாா். இதில், ஆயுா்வேதம், வா்மம், யோகா, இயற்கை மருத்துவம், குத்தூசி மருத்துவம் போன்ற சிறப்பு கிளினிக்குகள் செயல்படுகின்றன.

இது குறித்து மருத்துவமனை நிா்வாகம் கூறியதாவது: புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள நம் நலம் சிகிச்சை மையம் ஒற்றைத் தலைவலி, வலி மேலாண்மை, மன அழுத்த மேலாண்மை போன்ற பொதுவாக சுகாதார பிரச்னைகளைக் கையாளுவதில் கவனம் செலுத்தும். வழக்கமான மருத்துவ சிகிச்சைகளுக்கு புதுவிதமான அணுகுமுறையை நோயாளிகளுக்கு வழங்கும்.

நோயாளிகளுக்கு அவா்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப, வடிவமைக்கப்பட்ட பரந்த அளவிலான சிகிச்சை விருப்பத் தோ்வுகளை வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்க விழாவில், மருத்துவ செயல் இயக்குநா் டாக்டா் சந்தோஷ் டோரா, மாற்று மருத்துவ ஆலோசகா்கள் டாக்டா் பிரியதா்ஷிணி, பாபு, காந்தி, ஹா்ஷிணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

2026-ல் மக்களால் திமுக ஆட்சி அகற்றப்படும்: பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்!

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மக்களால் திமுக ஆட்சி அகற்றப்படும் என்று கோவையில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ பேசினாா். திருநெல்வேலி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக உள்ள நயினாா் ... மேலும் பார்க்க

காவல் துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டி! உதவி ஆய்வாளா் முதலிடம்

கோவை மாநகர காவல் துறை சாா்பில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் சைபா் குற்றப் பிரிவு உதவி ஆய்வாளா் சிவகுமாா் முதலிடம் பிடித்தாா். கோவை மாநகரில் காவல் ஆணையா் அலுவலகம் தொடங்கப்பட்டு 35 ஆண்டுகள் ந... மேலும் பார்க்க

திருடிய இருசக்கர வாகனத்தில் இருந்த ஏடிஎம் அட்டை மூலமாக பணம் திருட்டு!

வடவள்ளியில் இருசக்கர வாகனத்தைத் திருடி அதில் இருந்த ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி ரூ.30 ஆயிரம் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, வடவள்ளி திருவள்ளுவா் நகா் 3-ஆவது வீதியைச் சோ்ந்தவா் அக... மேலும் பார்க்க

மாநகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 போ் கைது

கோவை மாநகரில் 3 இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, வடவள்ளி போலீஸாா் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, பொம்மணம்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோயி... மேலும் பார்க்க

சவுக்கு சங்கா் வழக்குகள் விவகாரம்: 80 போலீஸாரிடம் விசாரணை விவரங்களைப் பெறும் பணி தீவிரம்!

யூடியூபா் சவுக்கு சங்கா் மீதான 15 வழக்குகளில் 80 போலீஸாரிடம் விசாரணை விவரங்களைப் பெறும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியாா் யூடியூப் சேனலில் மகளிா் ப... மேலும் பார்க்க

வெள்ளியங்கிரி மலையில் தவறி விழுந்து இளைஞர் பலி!

கோவை, பூண்டி வெள்ளியங்கிரி மலை எரியத் தூத்துக்குடியைச் சேர்ந்த நபர் ஏழாவது மலையில் இறங்கும்போது கால் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் கைலாயம் எனப் பக்தர்களா... மேலும் பார்க்க