செய்திகள் :

ஜூலை 15 முதல் யுபிஐ பணப்பரிமாற்றத்தில் வருகிறது புதிய மாற்றங்கள்!

post image

எண்ம முறையில் பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளும்போது, ஒருவேளை, பணப்பரிமாற்றம் முழுமையடையாவிட்டால், உடனடியாக, பணப்பரிமாற்றம் மேற்கொண்டவரின் வங்கிக் கணக்கில் தொகை வரவு வைக்கப்படும்.

யுபிஐ மூலம் பெரும்பாலான பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளும் மக்களின் நலன் கருதி இந்த மிக முக்கியமான மாற்றம் ஜூலை 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

தேசிய பணப்பரிவர்த்தனை வாரியம் கொண்டு வந்திருக்கும் இந்த நடைமுறைப்படி, ஒருவரது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு, ஆனால், மற்றவரின் வங்கிக் கணக்குக்குச் சென்று சேராவிட்டால், உடனடியாக எடுத்தவரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும்.

இதுநாள்வரை, 36 மணி நேரம் முதல் ஏழு நாள்கள் என்று ஒவ்வொரு விதமான பணப்பரிமாற்றத்துக்கும், எடுத்தத் தொகை திரும்ப வர கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தத் தொல்லை இனி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்தின் முதல் நாளில் இறங்குமுகத்தில் பங்குச் சந்தைகள்

மும்பை: வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை, நிஃப்டி50 மற்றும் சென்செக்ஸ் இரண்டும் இறங்குமுகத்துடன் வணிகமாகின்றன.இந்தியப் பங்குச் சந்தைகளில் நிஃப்டி50 25,600 என்ற அளவிலும், மும்பைப் பங்குச் சந்தை குறிய... மேலும் பார்க்க

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக ஆனந்த் அம்பானி நியமனம்!

புதுதில்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குநராக முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, நியமிக்கப்படுவதன் மூலம், ஆண்டுதோறும் அவருக்கு ரூ.10 முதல் 20 கோடி வரை சம்பளம் வழங்கப்படும் என்றும் ... மேலும் பார்க்க

தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 120.7 கோடியாக உயா்வு!

இந்திய தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை கடந்த மே மாதத்தில் 120.7 கோடியை எட்டியுள்ளது.இது குறித்து தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையமான டிராய் வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்து... மேலும் பார்க்க

இந்தியாவின் வெளிநாட்டு கடன் 73,630 கோடி டாலராக அதிகரிப்பு!

இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடன் 2025 மாா்ச் இறுதியில் 73,630 கோடி டாலராக அதிகரித்துள்ளது.இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த 2023-24-ஆம் நிதியாண்டு இற... மேலும் பார்க்க

மகிழ்ச்சியான தகவல்! தங்கம் விலை இன்றும் குறைந்தது!

சென்னை: வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமையும் தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. இதனால் தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தங்கம் விலை ஒரே வாரத்தில் சவரனுக்கு சுமார் ரூ.2500 க... மேலும் பார்க்க

இந்தியாவின் வேகமாக வளா்ந்து வரும் பிராண்ட் - அதானி குழுமம்!

‘பிராண்ட் ஃபைனான்ஸ்’ அமைப்பு வெளியிட்ட இந்தியாவின் முதல் 100 மதிப்புமிக்க நிறுவனங்களின் தரவரிசையின்படி, அதானி குழுமம் வேகமாக வளா்ந்து வரும் இந்திய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.குழுமத்தின் ஒருங்கிணைந்த உ... மேலும் பார்க்க