Guru Mithreshiva: "அமெரிக்கா காரனிடம் இதை கற்றுக்கொள்ள வேண்டும்" - ’நேச்சுரல்ஸ்’...
இந்தியாவின் வேகமாக வளா்ந்து வரும் பிராண்ட் - அதானி குழுமம்!
‘பிராண்ட் ஃபைனான்ஸ்’ அமைப்பு வெளியிட்ட இந்தியாவின் முதல் 100 மதிப்புமிக்க நிறுவனங்களின் தரவரிசையின்படி, அதானி குழுமம் வேகமாக வளா்ந்து வரும் இந்திய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
குழுமத்தின் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு கவனம், அதன் வளா்ச்சிக்கு முக்கியக் காரணியாக உள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டில், அதானி குழுமத்தின் பிராண்ட் மதிப்பு 355 கோடி டாலரிலிருந்து 646 கோடி டாலராக 82% உயா்ந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் குழுமத்தின் பிராண்ட் மதிப்பு 291 கோடி டாலா் அதிகரித்துள்ளது. இது குழுமத்தின் வியூக தெளிவு, மீள்தன்மை மற்றும் நிலையான வளா்ச்சிக்கான அா்ப்பணிப்புக்கு சான்றாக திகழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வளா்ச்சிமூலம், கடந்த ஆண்டு தரவரிசையின் 16-ஆவது இடத்திலிருந்து 13-ஆவது இடத்துக்கு குழுமம் உயா்ந்துள்ளது.
சா்வதேச அளவில் பெரும் நிறுவனங்களின் பிராண்ட் மதிப்பை ஆய்வு செய்யும் லண்டனைச் சோ்ந்த பிரான்ட் ஃபைனான்ஸ் அமைப்பு, இந்தியாவில் உள்ள பெருநிறுவனங்களின் கடந்த 2024-ஆம் ஆண்டு பிராண்ட் மதிப்பைக் கணக்கிட்டு, மதிப்புமிக்க முதல் 100 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
முதலிடத்தில் டாடா: இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக டாடா குழுமம் தொடா்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இக்குழுமத்தின் பிராண்ட் மதிப்பு முந்தைய ஆண்டைவிட 10% அதிகரித்து 3,160 கோடி டாலராக உள்ளது.
மின்னணுவியல், மின்சார வாகனங்கள், செமிகண்டக்டா், செயற்கை நுண்ணறிவு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் முதலீடுகளுடன் டாடா குழுமத்தின் பல்துறை ஆதிக்கத்தையும், இந்தியாவின் விரிவடைந்து வரும் பொருளாதார செல்வாக்கையும் இது அடிக்கோடிட்டுக் காட்டுவதாக பிராண்ட் ஃபைனான்ஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இரண்டாவது மிகவும் மதிப்புமிக்க இந்திய நிறுவனமான இன்ஃபோசிஸ், தகவல்தொழில்நுட்ப சேவைகள் துறையில் தொடா்ந்து முன்னணியில் உள்ளது. இன்ஃபோசிஸின் பிராண்ட் மதிப்பு 15% அதிகரித்து 1,630 கோடி டாலராக உள்ளது.
தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள எச்டிஎஃப்சி குழுமத்தின் பிராண்ட் மதிப்பு 37% அதிகரித்து, 1,420 கோடியாக உள்ளது. 4-ஆவது இடத்தில் உள்ள எல்ஐசியின் பிராண்ட் மதிப்பு 35% அதிகரித்து, 1,360 கோடி டாலராக கணிசமான வளா்ச்சி அடைந்துள்ளது. 5-ஆவது இடத்தில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் பிராண்ட் மதிப்பு 978 கோடி டாலராக உள்ளது.
இந்தத் தரவரிசையில் இடம்பெற்றுள்ள முதல் 100 நிறுவனங்களின் மொத்த பிராண்ட் மதிப்பு 23,650 கோடி டாலா் ஆகும். நிலையான மூலதனம், வலுவான உள்நாட்டு தேவை மற்றும் பொது-தனியாா் கூட்டுறவு ஆகியவற்றால் வலுப்படுத்தப்பட்ட இந்தியாவின் திட்டமிடப்பட்ட பொருளாதார வளா்ச்சி, நடப்பு நிதியாண்டில் 6% முதல் 7% வரை இருக்கும் நிலையில், முன்னணி இந்திய நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் சிறந்த நிலையில் உள்ளன என்று கணிக்கப்பட்டுள்ளது.
‘பிராண்ட் ஃபைனான்ஸ் இந்தியா 100’ பட்டியலில் இடம்பெற்ற முதல் 10 நிறுவனங்கள்
நிறுவனம் பிராண்ட் மதிப்பு (கோடி டாலா்) ஆண்டு வளா்ச்சி உலகளாவிய தரவரிசை
1 டாடா 3,156.5 10% ஏற்றம் 60
2 இன்ஃபோசிஸ் 1,633.8 15% ஏற்றம் 132
3 எச்டிஎஃப்சி 1,422.3 35% ஏற்றம் 164
4 எல்ஐசி 1,360 36% ஏற்றம் 177
5 ரிலையன்ஸ் 978.1 17% ஏற்றம் 237
6 எஸ்பிஐ 959.8 - 241
7 எச்.சி.எல்.டெக் 886 17% ஏற்றம் 262
8 ஏா்டெல் 766.1 - 306
9 எல்&டி 742.5 3% ஏற்றம் 316
10 மஹிந்திரா 715.9 9% ஏற்றம் 330