ஆஸி. - தெ.ஆ. போட்டி ரத்தானால் அரையிறுதிக்கு தகுதிபெறுவதில் சிக்கல்!
ஜெயலலிதா படத்துக்கு புதுவை முதல்வா் மரியாதை
புதுச்சேரி: தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்துக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் திங்கள்கிழமை மரியாதை செலுத்தினா்.
தமிழக முன்னாள் முதல்வா் மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி புதுச்சேரி நகராட்சி மேரி கட்டடத்தில் திங்கள்கிழமை அவரது திருவுருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அங்கு முதல்வா் என்.ரங்கசாமி, பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், சட்டப்பேரவைத் துணைத் தலைவா் பி.ராஜவேலு, அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.பாஸ்கா், எஸ்.ரமேஷ் ஆகியோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
இவா்களைத் தொடா்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகா் உள்ளிட்டோரும் ஜெயலலிதா படத்துக்கு மரியாதை செலுத்தினா்.
முத்தியால்பேட்டை பகுதியில் ஜெயலலிதா படத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் மரியாதை செலுத்தினாா்.