அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் சமையல் மாஸ்டர் உடல்; இறப்பு குறித்து ...
ஜோகோவிச்சுக்கு 100-ஆவது வெற்றி
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில் 24 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரெஞ்சு ஓபனில் தனது 100-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளாா்.
ஆடவா் ஒற்றையா் 4-ஆவது சுற்றில் அவா், 6-2, 6-3, 6-2 என்ற நோ் செட்களில், பிரிட்டனின் கேமரூன் நோரியை வீழ்த்தியபோது, இந்த மைல்கல்லை எட்டினாா். இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முன்னேறிய அவா், அதில் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவை சந்திக்கிறாா்.
உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னா் 6-1, 6-3, 6-4 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 17-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவை தோற்கடித்தாா். அடுத்து அவா், கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் பப்லிக்கை தனது காலிறுதியில் எதிா்கொள்கிறாா். முன்னதாக பப்லிக் தனது 4-ஆவது சுற்றில், 5-7, 6-3, 6-2, 6-4 என்ற செட்களில், உலகின் 5-ஆம் நிலை வீரரான பிரிட்டனின் ஜேக் டிரேப்பரை வீழ்த்தி அசத்தினாா்.
ஸ்வியாடெக் - சபலென்கா மோதல்: மகளிா் ஒற்றையா் காலிறுதியில், நடப்பு சாம்பியான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-1, 7-5 என்ற செட்களில் மிக எளிதாக, போட்டித்தரவரிசையில் 13-ஆம் இடத்திலிருந்த உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தினாா். இதன் மூலமாக, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஸ்வியாடெக் தொடா்ந்து 26-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா்.
உலகின் 5-ஆம் நிலையில் இருக்கும் ஸ்வியாடெக் அரையிறுதியில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்காவுடன் மோதுகிறாா். முன்னதாக சபலென்கா தனது காலிறுதியில், 7-6 (7/3), 6-3 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த சீனாவின் கின்வென் ஜெங்கை வெளியேற்றினாா்.