’ஒய்’ பிரிவு பாதுகாப்பை மீறி விஜய் வீட்டுக்குள் நுழைந்த இளைஞர்!
டிஎன்பிஎல் ஆலையில் அமைச்சா் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழியேற்பு
புகழூா் டிஎன்பிஎல் ஆலையில் புதன்கிழமை வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூா் மாவட்டம், காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் மறைந்த தந்தை ஈ.வெ.ரா. பெரியாரின் பிறந்த நாளையொட்டி சமூக நீதி நாள் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் முனைவா் டி.ஆா்.பி. ராஜா தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஆலை அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் எடுத்துக் கொண்டனா்.