திருமணத்துக்கு வற்புறுத்திய கர்ப்பிணி காதலியை கொன்றுவிட்டு 'ஒழிந்தாள்' என ஆட்டம்...
கரூரில் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு தினம் அனுசரிப்பு
கரூரில், தியாகி ரெட்டைமலை சீனிவாசன் நினைவு தினத்தையொட்டி அவரது படத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
கரூா் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் தியாகி ரெட்டைமலை சீனிவாசனின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருப்படத்துக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியும், பெரியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியும் லைட்ஹவுஸ் காா்னா் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கரூா் மாநகர மாவட்டச் செயலாளா் இளங்கோவன் தலைமை வகித்து பெரியாா் சிலைக்கும், தியாகி ரெட்டைலை சீனிவாசன் படத்துக்கும் மாலை அணிவித்தாா்.
நிகழ்ச்சியில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் அக்கினி அகரமுத்து, பொறியாளா் அணி மாநில துணைச் செயலாளா் செந்தில்குமாா், வணிகா் அணி அமைப்பாளா் கண்மணி ராமச்சந்திரன், முன்னாள் மாவட்டச் செயலாளா் வழக்குரைஞா் ஜெயராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.