செய்திகள் :

டிரெண்டாகும் ஸ்குவிட் கேம் - 3..! நீங்கள் பார்த்துவிட்டீர்களா?

post image

பிரபல கொரியன் இணையத் தொடரான ஸ்குவிட் கேம் - 3 நேற்றுமுதல் (ஜூன் 27) நெட்பிளிக்ஸில் வெளியானது.

பிரபல கொரியன் இயக்குநர் கவாங் டோங்யுக் இயக்கத்தில் லீ ஜங் ஜே, பார்க் கே சூ, வி கா ஜோன் ஆகியோர் நடித்து கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்குவிட் கேம்மின் முதல் பாகம் வெளியானது.

இந்தத் தொடரில் கடனில் இருப்பவர்களிடம் பேசி ஒரு விளையாட்டை அறிமுகம் செய்கிறார்கள். விளையாட ஒப்புக் கொள்கிறவர்களை அடையாளம் தெரியாத இடத்தில் அடைத்து வைத்து ஒரு குழு விளையாட்டை நடத்துகிறது.

அந்த விளையாட்டில் வெற்றி பெறுபவர்களுக்கு பெருந்தொகை வழங்கப்படும், மாறாக தோற்றால்? விதவிதமாக கொல்லப்படுகிறார்கள்.

அடுத்தடுத்து திருப்பங்கள் யாரும் ஊகிக்க முடியாத வகையில் அமைக்கப்பட்ட திரைக்கதையால், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட இந்தத் தொடருக்கு தமிழகம் இன்றி, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, ஸ்குவிட் கேம் 2-வது சீசன் உருவானது. அண்மையில், வெளியான இந்த சீசனும் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில், ஸ்குவிட் கேம் - 3 நேற்று ( ஜூன் 27) வெளியானது. இதுவே இறுதி சீசன் எனவும் நெட்பிளிக்ஸ் தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்களில் பலரும் இந்தத் தொடர் குறித்து பதிவிட்டு வருகிறார்கள். நடிகைகள் சிலர் இந்தத் தொடரைப் பார்த்துவிட்டீர்களா என இன்ஸ்டாவில் ஸ்டோரி வைத்துள்ளார்கள்.

The popular Korean web series Squid Game-3 was released on Netflix yesterday. Its viral on social medias.

நல்ல படங்களை காலம்தான் தீர்மானிக்கும்: மகிழ் திருமேனி

இயக்குநர் மகிழ் திருமேனி, எது நல்ல படம் என்பதை காலம்தான் தீர்மானிக்கும் எனக் கூறியுள்ளார். மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் கடந்த 2012 -இல் தடையறத் தாக்க திரைப்படம் வெளியானது. த... மேலும் பார்க்க

மயில்சாமி மகனுடன் நடிக்கும் நடிகை பாடினி குமார்!

புதிய வெப் தொடரில் யுவன் மயில்சாமியுடன் நடிகை பாடினி குமார் நடிக்கிறார்.மறைந்த புகழ் பெற்ற காமெடி நடிகரான மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி. இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான தணியும் என்ற திரைப்படத்தில் நட... மேலும் பார்க்க

காவல் துறை அதிகாரியாக நடிக்கும் கௌதம் ராம் கார்த்திக்?

நடிகர் கௌதம் ராம் கார்த்திக், அறிமுக இயக்குநர் சூரியபிரதாப் என்பவரின் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2024-ம் ஆண்ட... மேலும் பார்க்க

2-ஆவது குழந்தைக்கு தாயான இலியானா..! பிரியங்கா சோப்ரா வாழ்த்து!

நடிகை இலியானா தனக்கு இரண்டாவது குழந்தைப் பிறந்துள்ளது என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தமிழில் நடிகர் விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்த நடிகை இலியானா பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருக்கிறார். அமெ... மேலும் பார்க்க

புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை மீண்டும் தொடக்கம்

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதா் கோயில் ரத யாத்திரை, கூட்ட நெரிசல் காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில், சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு மீண்டும் தொடங்கியது.புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை வெள்ள... மேலும் பார்க்க

மேஜா் லீக் கால்பந்து ஊதியம்: நம்பா் 1-ஆக நீடிக்கும் மெஸ்ஸி

அமெரிக்காவின் மேஜா் லீக் கால்பந்து போட்டியில் அதிக ஊதியம் பெறும் வீரராக, ஆா்ஜென்டீன நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி தொடா்ந்து 3-ஆவது ஆண்டாக நீடிக்கிறாா்.மேஜா் லீக் சாக்கா் வீரா்கள் சங்கம் வெளியிட்ட தகவலின்பட... மேலும் பார்க்க